வரலாற்றில் இன்று (24.01.2024 )

 வரலாற்றில் இன்று (24.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 24 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

41 – கலிகுலா படுகொலை செய்யப்பட்டான். அவனது மாமன் குளோடியஸ் முடி சூடினான்.
1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.
1857 – தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.
1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
1908 – பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.
1918 – கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1924 – ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1927 – ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.
1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்
1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.
1966 – ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.
1978 – கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.
1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.
1993 – துருக்கிய ஊடகவியலாளரும்ம் எழுத்தாளருமான ஊகுர் மும்க்கு அங்காராவில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1996 – மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.
2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார்.

பிறப்புகள்

1924 – சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (இ. 2009)

இறப்புகள்

1965 – வின்ஸ்டன் சர்ச்சில், பிரித்தானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)
1966 – ஹோமி பாபா, இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் (பி. 1909)
2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)

சிறப்பு நாள்

******

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...