சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள்- 23, ஜனவரி
இந்திய நாடு விடுதலை பெற,
போராடிய வீரர்கள் ஏராளம்,
அதில் முதன்மையான வீரர்களில் ,
ஒருவர் தான் எங்கள் “நேதாஜி”
‘சுபாஷ் சந்திர போஸ்’ என்பதுவே,
அவர் இயற் பெயராக இருந்தாலும்,
“நேதாஜி” என்றே அன்பாக,
அனைவராலும் அழைக்கப்பட்டார்.
இருண்டு கிடந்த நம் நாட்டினிலே,
வெள்ளையன் ஆண்ட காலத்திலே,
விடி வெள்ளியாக வந்த இவர்,
ஒரு நம்பிக்கை ஒளியாய் பிரகாசித்தார்.
ஜானகிநாத் போஸ், பிரபாவதிக்கு,
1897ல் ஜனவரி மாதம் 23ல்,
மகனாய்ப் பிறந்த இவ்வங்காளி,
இளமைப் பருவம் முதற்கொண்டே,
ஒரு அறிவு ஜீவியாகத் திகழ்ந்திட்டார்.
நாட்டுப் பற்று மிகுதியினால்,
ICS (இன்றைய IAS) பதவியை துறந்துவிட்டு ,
சுதந்திரப் போராட்ட இயக்கத்திலே,
முழ மூச்சாக ஈடுபட்டார்.
பயம் என்னவென்றே அறியாதவர்,
சுவாமி விவேகானந்தரின் பெரும் பக்தர்.
சுதந்திர வேட்கை மிகக் கொண்டு,
பல போராட்டங்களில் ஈடுபட்டார்,
பல முறை சிறைக்குச் சென்ற இவர்,
தியாகச் செம்மலாய் இன்று ஒளிர்கின்றார்.
இந்திய தேசிய காங்கிரசில்,
பெரும் பதவிகளை வகித்த பின்பு ,
ஜெர்மனி – ஜப்பானின் உதவியுடன்,
பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட,
INA எனும் ஒர் போர்ப் படையை,
உருவாக்கிய மாவீரன் இவரேதான்.
அந்தோ ! காலம் செய்த கொடுமையினால்,
(1945ல்) அகால மரணம் அடைந்த இவர்,
இந்தியா சுதந்திரம் பெரும் நாள் வரையில்,
உயிரோடு இல்லாதது,
எல்லோருக்கும் பெரும் வருத்தம் தான்.
அவர் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம்,
(23rd January)
தேசப் பற்றை வளர்த்துக்கொண்டு,
பிரிவினையை வெறுத்திடுவோம்,
நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்த்திடுவோம்.
பி வி வைத்தியலிங்கம்.