திருப்பி அளிக்கப்பட்ட நன்கொடை!

 திருப்பி அளிக்கப்பட்ட நன்கொடை!

அயோத்தியில் ராமர் கோவிலில் ராமர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தலித் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிதி ஏற்றுக்கொள்ளப்படாது ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட முடிவு ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோயில் சடங்குகளுக்கு தலித்துகளின் பணம் ஏற்கப்படாது, தலித்கள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் எனக் கூறி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக பெறப்பட்ட நிதி திருப்பி அளிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து தலித் அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முண்ட்லா கிராமத்தில் உள்ள தலித்துகள் அயோத்தி ராமர் கோவில் விழாவை முன்னிட்டு உள்ளூர் அளவில் நடக்கும் ஊர்வலங்கள், கலச யாத்திரைகள் மற்றும் பிரசாதம் (சாத்திரமான உணவு) விநியோகம் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு முதலில் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆனால், கோயில் சடங்குகளுக்கு தலித்துகளின் பணம் ஏற்கப்படாது என்றும், அவர்கள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் என்றும் நன்கொடை வசூல் செய்தவர்கள் தலித்துகளிடம் திருப்பிக் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலித் சமூகத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்ட இந்தச் செயலுக்குப் அங்கே கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

வீடு வீடாக வாங்கப்பட்ட தலித் மக்களின் பணம் அவர்களின் வீடுகளை தேடி சென்று பணம் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

இன்று திறக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி இன்று ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் ‘கருடா’ போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.

நாடு முழுக்க இந்த விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மொத்த நாடுமே இந்த விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...