மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் :
ஓஷோ நினைவு நாளின்று!
மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் :
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.
முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.
“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்
அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.
நேரம் போய் கொண்டே இருந்தது.
அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.
இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.
அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது
இக்கதையைச் சொன்ன ஓஷோ அடிசினலாகச் சொன்னது: “மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கணத்தில் வாழ்வதில்லை !”
இன்னொரு கதை :
ஒரு மனிதன், இந்த உலகமே சரியில்லை இங்குள்ள மனிதர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தான்.அவன் இறைவனினிடம் சென்று இறைவா நான் இந்த உலக மனிதர்களை மாற்ற நினைக்கிறேன் எனக்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.
இறைவனும் நல்லது நான் உனக்கு 20 வருடங்கள் அவகாசம் தருகிறேன் முயற்சி செய் என்று அருளினார்.
20 வருடங்கள் கழித்து அந்த மனிதன் இறைவனிடம் சென்று இறைவா என்னால் இந்த உலகத்தை மாற்ற முடியவில்லை அதனால் இந்த நாட்டில் உள்ள மக்களை மட்டுமாவது மாற்றி திருத்த நினைக்கின்றேன் என்றான்.
இறைவனும் அப்படியே ஆகட்டும் நான் உனக்கு ஒரு 15 வருடங்கள் தருகிறேன் முயற்சி செய் என்றார்.
15 வருடங்கள் கழித்து அந்த மனிதன் கடவுளிடம் சென்று கடவுளே என்னால் இந்த நாட்டு மக்களை திருத்த முடியவில்லை.. நான் எனது ஊரில் உள்ள மக்களையாவது மாற்ற நினைக்கிறேன் என்றான்
கடவுளும் சரி நான் உனக்கு 10 வருடங்கள் நேரம் தருகிறேன் முயற்சி செய் என்றார்.
10 வருடங்கள் சென்று அந்த மனிதன் மீண்டும் கடவுளிடம் சென்று இறைவா இந்த ஊரில் உள்ள மக்களையும் எனனால் திருத்த முடியவில்லை ஆகவே எனது குடும்பம் சுற்றத்தினரை மட்டும் திருத்த முயற்சிக்கிறேன் என்றான்.கடவுளும் நல்லது உனக்கு நான் ஒரு 5 வருடம் கால அவகாசம் தருகிறேன் என்றார்.
இறுதியில் அந்த மனிதன் கடவுளிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் கடவுளே என் எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டன. கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன்.
நான் என்னை மட்டும் மாற்றிக்கொள்ள அருள் புரியவும் என்றான்.
கடவுளும் அந்த மனிதனை நோக்கி அப்பா இதை நீ ஆரம்பத்திலேயே கேட்டு இருக்க வேண்டும் ஏனெனில் உன்னுடைய வாழ்க்கை முடியப்போகிறது இப்போது எந்தப் பயனும் இல்லை என்றார்