சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -2
மைமகளின் அலகு குத்தல் –வேல் பாய்ச்சல் -2
அன்பான நண்பர்களே
வணக்கத்துடன்
சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் .
நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில் கந்த புராணத்தை கவிதை வடிவில் கொண்டு வருகிறேன் . .ஆன்மிகம் பாதையில் சாதனை புரிந்தோர் .என்ன புதிதாக சொல்லிவிடப்போகிறான் என்று? என்னை ஏளனமாக பார்க்கலாம் .நான் அணில் தான் ஆனால் என்னாலும் மரத்தின் உச்சாணியில் இருந்து கொண்டு உலகை பார்க்க முடியும் .அந்த தேடல் தான் இது .
குறை இருக்கும் ,நிறை வரும்போது குறை மறைந்து விடும் .நான் நிறை தேடி பயணிக்கிறேன் .என்னை எழுத தூண்டிய என் தோழி ஸ்வீட்லின்,லதா சரவணன் ,கமலகண்ணன் ஆகியோருக்கு நன்றிகள் ..
இந்த கவிதை தொடர் ஈழத்தில் என் இன விடுதலைக்காக உயிர் துறந்த தியாகங்களுக்கு சமர்ப்பணம்
வேல் பாய்ச்சல் -2
கதிரொளி வீணையின் இசையன பரவ , கானக மொழி ,பொன்னிறமாய் சிரிக்க , இயற்கை வழி இதயத்திற்குள் ஊருடுவ , மலைத் தோழி காதலியாய் கண் சிமிட்டினாள்…குறிஞ்சி மலைத் தோழி காதலியாய் கண் சிமிட்டினாள்… பூக்களின் முகத்தில் முத்தம் பதித்து-அழகு பாக்களை வரைந்த வண்டினம் போக்கிடம் தெரியாது மயங்கி கிடைக்க, யாக்கையில்(உவகை ) முகம் காட்டியது பனித்துளி கருமேகம் தழுவிட ,கறுப்பன் குளிர்ந்திட பெரு மயில்கள் தோகை விரித்திட மரு(வாசனை ) மங்கையர் நளினம் கொள்ள . பெருமை கொண்டது குமாரன் வாழும் இல்லம் தீ பிழம்பாய் உருவம் அற்று இருந்த பிதா அவன் தீ தொலைந்து உருவம் காண ,குமாரன் ஆனான் தீஞ்சுவையும் கவிபாடும் மலை கூட்டில் தீ குளிர்ந்து ,ஆறு பூக்களில் அகம் கொண்டான் …. மெய்சக்தி மேனி பெற்று,மானுடம் என்றது பொய்யில்லா உலகை படைக்க தவக்கோலம் கண்டது மெய் அழகன் அவன் சுவாசம் தமிழ் ஆனது -அவனின் வாய்மை குறிஞ்சியின் பாட்டானது… மலையும் மலையை சார்ந்த இடமும் மறையோன் குமாரனின் தடயம் கலையும் கலையை பேசும் குன்றுகளும் கலைஞன் அவனின் தத்துவ பீடம் .. ஞானம் சொல்லுவான் ,ஞாயிறாய் சிரிப்பான் வானம் காட்டுவான் ,வழியை போதிப்பான் வேதம் வரைவான் ,வேலில் முடிப்பான் இரக்கம் கொள்ளுவான் ,இறைவனாய் ரூபம் காண்பான் அவனை காட்டிட,அவனை கொண்டாடிட அவனில் அனலாக ,நான் கவிதை வரைந்தேன் அவனில் அங்கம் கொள்ள வாடி தோழி அவனாலே பங்கம் தொலைப்போம் வாடி தோழி சேயோன் ,செங்கதிரில் சிறக்கட்டும் இத்தொகுப்பு மாயோன் அவனின்றி எது சிறப்பு . மலையோன் அவன் புகழை படுகிறேன் கலையோன் அவனில் குழைகிறேன்…தோழி நிலையாகும் என் எழுத்து என்பதாலே ...