இன்று இலக்கை அடையும் ஆதித்யா எல் 1 | சதீஸ்

 இன்று இலக்கை அடையும் ஆதித்யா எல் 1 | சதீஸ்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் இன்று மாலை தனது இலக்கான எல்1 என்ற புள்ளியைச் சென்றடையும் என்று இஸ்ரோ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிமீ தொலைவில் இருந்தாலும் உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் உயிர்நாடி என்றால் அது சூரியன் தான். சூரிய கதிர்களே பூமியில் அனைத்து உயிர்களும் தோன்ற அடிப்படை காரணமாக இருக்கிறது.

மரம், செடிகளில் நடக்கும் ஒளிச்சேர்க்கை என்பது நடக்கச் சூரிய ஒளி முக்கியம். சூரியனும் அதன் ஒளியும் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்துப் போகும் என்பதே உண்மை.

இப்படி உலகிற்கு இந்தளவுக்கு முக்கியமான சூரியன் குறித்துக் கண்டறிய உலகெங்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா சூரியனைக் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவும் தனது ஆத்தியா விண்கலம் மூலம் சூரியன் குறித்த ஆய்வுகளைத் தொடங்கியது. இதற்காக ஆத்தியா எல் 1 என்ற சாட்டிலைட்டை கடந்த செப். மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். மேலும், இது சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் இந்த காந்த புயல்கள் பூமியைத் தாக்கும் போது அவை மொத்தமாக சாட்டிலைட் செயல்பாடுகள், மின்சார கட்டமைப்புகளை முடக்கிப் போடும் அபாயம் இருக்கிறது.

இதன் காரணமாகவே ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஆத்தியா விண்கலம் சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) என்ற தனது இலக்கை நோக்கிப் பயணித்து வந்தது. இந்தச் சூழலில் ஆதித்யா விண்கலம் இன்று தனது இலக்கை அடைந்து 125 நாள் பயணத்தை நிறைவு செய்யும்.

இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா எல்-1 அதன் பாதையில் நிறுத்தப்படும். இன்று மாலை எல்1 புள்ளியைச் சென்றடையும் ஆத்தியா விண்கலம், செங்குத்தான சுற்று வட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆய்வுகளை ஆத்தியா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...