அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார்! |சதீஸ்

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார்! |சதீஸ்

சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று (ஜன.6) அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து துவங்கியது.  இந்த மாரத்தான் ஓட்டம் 10 கி.மீ, 21 கி.மீ, 32 கிமீ, மற்றும் 42 கி.மீ தொலைவுகளில் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என 20,000 பேர் கலந்து கொள்ளும் இந்த மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

அந்த வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் 12-வது ஆண்டாக இன்றும் நடத்தப்படுகிறது.இந்த மாரத்தான் ஓட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பெசன்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து துவங்கும் இந்த மாரத்தான்
ஓட்டம் சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக ஓஎம்ஆர் சாலை இசிஆர் சாலை வழியாக முத்துக்காடு வரை சென்றடைகிறது.

இந்த மாரத்தான் ஓட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியினை,  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்த உள்ளனர். மேலும் சென்னை மாநகரம், பெண்களுக்கு பாதுகாப்பானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டத்தில் 35 சதவீதம் பெண்கள்
பங்கேற்றுள்ளனர்.

இந்த மாரத்தான் ஓட்டத்திற்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.  மேலும் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இதனை முன்னிட்டு இன்று (ஜன.6) அதிகாலை 3 மணி முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் பயணிகள் சிறப்பு QR குறியீடு பயண அட்டையை பயன்படுத்தி இன்று (ஜன.6) மட்டும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மாரத்தான் பங்கேற்பாளர்கள் இன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...