லிப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… மும்பையில் நேவி பகுதியில் சோகம்

 லிப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… மும்பையில் நேவி பகுதியில் சோகம்


நேவி நகரில் இருக்கும் லெப்டினண்ட் கர்னலின் வீட்டில் வேலை பார்த்து வந்த 51 வயது பெண்மணி ஆர்த்தி தஷ்ரத்பர்தேசி. கர்னலின் வீட்டில் இருந்து நாயை வாக்கிங் அழைத்து செல்ல கிளம்பியபோது, நாய் லிப்டிக்குள் செல்லஅதை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஆர்த்தி. ஆனால் சுவருக்கும் லிப்ட்க்கும் இடையே மாட்டிக்கொண்டு உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் ஜி.டி மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்த்தி அவரது கணவருடன் நேவி நகரில் இருக்கும் குவார்ட்ரஸில் வசித்து வருகிறார். 

 து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் டோங்க்ரே கூறுகையில் “கடற்படை வீரர்களும், உள்ளூர் காவல்துறையினரும் ஆர்த்தியை லிஃப்ட் ஷாஃப்ட்டில் இருந்து 45 நிமிடங்கள் போராடி வெளியே கொண்டு வந்தோம். ஐ.என்.எஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் போது அவர் அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவர் எப்படி லிஃப்ட் சுவருக்கும் லிஃப்டுக்கும் இடையே மாட்டிக் கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...