நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்..! | சதீஸ்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரைக்குளம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
“மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்” என அமைச்சர் தங்கம் தென்னரசு என கூறியிருந்த நிலையில், திருநெல்வேலியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கியது.