நடிகை சௌகார் ஜானகி
நடிகை சௌகார் ஜானகி -க்கு 92 ஆவது பிறந்த நாளின்று
ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவரிவ ராஜமுந்திரி ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 15 வயசிலேயே ஆல் இந்திய ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றி இருந்தார். அவரின் குரலைக் கேட்டு பிரபல தெலுங்கு புரொடியூசர் ஒருவர் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்.ஆனால், ஜானகியின் குடும்பத்தினர் முடியாது என்று மறுத்து அவருக்கு திருமணம் செய்து விட்டார்கள். ஒரு ஆண்டில் குழந்தை, குடும்பத்தின் வறுமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் ஜானகி.
இதை அடுத்து முதலில் பட வாய்ப்பு கேட்டு வந்த தயாரிப்பாளர் இடமே கைக்குழந்தையுடன் வாய்ப்பு கேட்டு ஜானகி சென்றிருந்தார். ஆனால், அவர் திருமணம் ஆகிவிட்டது, குழந்தை பிறந்துவிட்டது, இனி முடியாது என்று சொன்னார். இருந்தும் ஜானகியம்மாள் தன்னுடைய சூழ்நிலையைச் சொல்லி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார்.அதற்கு பிறகு அந்த தயாரிப்பாளர் அவர் தம்பி எடுத்த படத்திற்கு அவரை சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். அந்த படம் தான் என்டிஆர் நடித்த சௌவுகார் படம் இந்த படத்தின் மூலம் தான் சவுகார்ஜானகி சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் 1947 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.
சொல்லப்போனால் என்டிஆரின் முதல் கதாநாயகியே சவுகார்ஜானகி என்று சொல்லலாம். அதற்கு பின்பு பிரபல ஜாம்பவான்களின் எல்லா படங்களிலும் சவுகார்ஜானகி நடித்திருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர், என்டிஆர் போன்ற பல முதலமைச்சர்கள் உடனும் இவர் நடித்திருக்கிறார்
ஆம்.. அப்போதே இவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களின் படத்தில் இணைந்து நடித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், சிவகுமார், ரஜினி, கமல் போன்ற எண்ணற்ற சிவகுமார், நடித்த பெருமை இவருக்கு உண்டு.
தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட இவர், ‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’ என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார். ‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 380-க் கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார். அன்று தொடங்கி இன்று வரை இவர் 70 ஆண்டு காலம் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்
திரையுலகில் தைரியமாகவும், யதார்த்தமாகவும் இருந்த நடிகைகளில் சவுகார் ஜானகியும் ஒருவர். திரையுலகில் தனக்கான காஸ்டியூம் செலவு, கார் பெட்ரோல், உணவு உள்ளிட்ட எல்லா செலவுகளையும் சொந்த உணவு செய்யும் ஒரே நடிகை சவுகார் ஜானகி தான்.
இவருடைய திரைப்படத்திற்காக பல விருதுகளை வாங்கியிருக்கிறார். இவர் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தேசிய இந்திய திரைப்பட விருதுகள் குழுவிற்கு இரண்டு முறை நடுவராகவும், மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
நகைச்சுவை, சோகம், மிடுக்கான நடை என பல்வேறு கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்து திரையுலகில் கோலோச்சிய நடிகைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை செளகார் ஜானகி.
1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான ‘பிஸ்கோத்’ படம் கடந்தும் தொடருகிறது. 93-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் செளகார் ஜானகி இன்றும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார். தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை யார் கொடுத்தாலும் நடிக்க தயாராக உள்ளதாக கூறும் சௌகார் ஜானகி இப்பவும் நடிக்க தயார் என்கிறார். ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர் என பன்முக திறமை கொண்ட ஜானகி இன்று (டிசம்பர் 12) 93-வது வயதில் அடியெடுத்து வைக்கும் தென்னிந்திய திரையுலகின் பொக்கிஷம் செளகார் ஜானகி