தியாகி விஸ்வநாததாஸ்

 தியாகி விஸ்வநாததாஸ்

தியாகி விஸ்வநாததாஸ்🙏🏼 மறைந்த நாளின்று:🐾😢

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ்.இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார்.

இளம் வயதிலேயே பாடுவதில் அளவுக்கதிகமான ஆர்வம்.1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை மேடையில் பாடினர் தாஸ். அவரது இனிய குரலை கேட்ட காந்திஜி ‘உங்கள் குரல் ,நாட்டு விடுதலைக்கு பயன்படட்டும் ‘என்றரர்.அதை வேத வாக்காக கருதி .அன்று முதல் தன பக்தி பாடல்கள்,நாடகங்கள் ,அனைத்திலும் தேச பக்தி பாடல்களையும் சுதந்திர போரட்ட வசனங்களையும் திணித்தார் .

அனல் பறக்கும் அவரது பாடல்களும் வசனங்களும் ஆங்கிலேயர்களை எரிச்சலடைய வைத்தது. இனி மேடையில் சுதந்திர பாடல்களைப் பாடக்கூடாது என தாஸ்க்கு உத்தரவிட்டது.. தாஸ் அதைமீறினார் . ஒரு தடவை அல்ல பல தடவை கைதானார். சிறைக்கு சென்றார் .அவர் மட்டும் அல்ல.அவரது குடும்பமே சிறையில் வாடியது.

மேடையில் பாடியதற்காக தாசின் மூத்த மகன் சுப்ரமணியன்தாஸ் திருமணமான சில தினங்களிலே பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டார் .

அப்போது விஸ்வநாததாஸ் கடலூர் சிறையில் இருந்தார்.’இனி விடுதலை போராட்ட பாடல்களை பாட மாட்டேன் என எழுதி கொடுத்து விட்டு,இதுவரை பாடியதற்கு மன்னிப்புக்கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறேன் ‘என சுப்ரமணியதாசிடம் நீதிபதி சொல்ல கடலூர் சிறையில் இருந்த தன தந்தையிடம் இது குறித்துக் கேட்டிருகிறார் சுப்ரமணிய தாஸ் .’மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுப்பதை விட சிறையிலே செத்துப்போ ‘ என ஆக்ரோசமாக மகனுக்குப் பதில் அனுப்பி இருக்கிறார் விஸ்வநாததாஸ் .

இப்படி ,ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திர போராட்ட பிரசாரத்தை மேடைகள் மூலம் அரங்கேற்றிக் கொண்டிருந்த விஸ்வநாத தாஸை,வறுமை எட்டிப்பார்த்தது .

அவரது வீடு ஏலத்துக்கு வந்தது .இதை அறிந்தார் அப்போதைய மேயர் வாசுதேவ நாயர் .நீதிக்கட்சியயைச் சேர்ந்தவர்.இவர் “நீங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு நீதிக்கட்சிக்கு வந்து சேர்ந்துவிடுங்கள். உங்கள் சொத்தை மீட்டு தருகிறோம் .மாதந்தோறும் குறுப்பிட்ட பணம் தருகிறோம்” என்றார்.

விஸ்வநாத தாஸ் கட்சி மாறச் சம்மதிக்க வில்லை.அவர் சென்னையில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் ‘ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நாடகம் நடத்துங்கள்.உங்கள் கடனை அடைக்கிறோம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருகிறோம்’ என சென்னை கவர்னர் எர்ஸ்கின் பிரபு வைத்த கோரிக்கை ,விஸ்வநாத் தாஸ் கோபமூட்டியது .

“உங்கள் பணம் எனக்கு அற்பமானது .பணம் கொடுத்து என் சுதந்திர உணர்வை மழுங்கடித்து விடமுடியாது ” என்றார் வீராவேசமாக .

இது ஆங்கிலேயருக்கு ஆத்திரம் மூட்டியது.அவரைக் கைது செய்ய திட்டமிட்டது .அது குறித்துக் கவலைப்படாமல் தனது நாடகங்களை சென்னையில் நடத்திக்கொண்டிருந்தார் .

1940-ம் ஆண்டின் கடைசி நாள்(31.12.1940) வள்ளி திருமணம் நாடகம் .அதில் ஆங்கிலேய அரசை விமர்சித்து கடுமையாக வசனங்கள் வரும் என்பதை அறிந்த ஆங்கிலேய காவல்துறை.அவரைக் கைது செய்யக் காத்திருந்தது.அவரது ஆக்ரோஷமான பாடல்களைக் கேட்க திரளான மக்கள் கூடியிருந்தர்கள் .திரை விலகியது.மயில் வாகனத்தில் முருகன் வேடத்தில் கையில் வேலுடன் பாடதொடங்கினார் தாஸ் .பாடல் உச்சஸ்தாயியில் செல்ல ….மூச்சு திணறல் ஏற்பட்டது .அடுத்த சில விநாடிகளிலே வாகனத்திலிருந்து சரிந்து கீழே விழுந்தார். மேடையிலே இறந்து போனார்.

மறுநாள் சென்னையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி,கே.பி.சுந்தரம்பாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

இது விஸ்வநாத தாஸ்சின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...