திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள் தெரியுமா?

திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள்  தெரியுமா?

 

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று

ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது.  சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள,சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை, திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது.

 

ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் சீனிவாசலு நாயுடு வழங்கிய இடத்தில்தான் குடை தயாராகும்.

 

இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் இது. வட சென்னையின் பிரதானமான விழா. ஒவ்வொரு வருடமும்  செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இந்ததிருப்பதி குடை ஊர்வலம்வைபவம் நடைபெற்று வருகிறது.

 

சென்னை சென்ன கேசவப் பெருமாள் கோயிலில்தான் இந்த திருப்பதி குடை தயாரிக்கும் பணி நடைபெறும். தேக்குக் கம்புகள், பட்டுத் துணிகள், மூங்கில்கள், வெள்ளி ஜரிகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரிலிருந்து கொண்டு வரப்பட்டு குடை தயாரிக்கப்படுகிறது. பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருள்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடன் 10 குடைகள் தயாரிப்பார்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து பட்டும் ஜரிகையும் வந்து சேர்கிறது.

 

இதில் இரண்டு குடைகள் திருப்பதிக்கானவை. பெரியவை. மற்ற எட்டும்செல்லும் வழியில் பெருமாள் கோயில்களில் வழங்கப்பட்டுவிடும். திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முன் செப்டம்பர்அக்டோபர் மாதங்களில்,சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து குடை ஊர்வலம் தொடங்கும்.

 

வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள்  யானை கவுனியை தாண்டும்குடைகள் யானை கவனியைத் நாட்டின் என்பது ஒவ்வொரு வருட வைபவத்தின்போதும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்டு வருகிறது.

 

யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக அங்கே எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும்.

 

 

அங்கே இரவு கோயிலில் ங்கிவிட்டு திகாலையில் புறப்படும் குடை, மறுநாள் .சி.எஃப்., வில்லிவாக்கம், அரும்பாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். இப்படியாக ஆறாவது நாள் திருப்பதியைச் சென்றடைகிறது. ‌‌திருப்பதிதிருக்குடை ர்வலத்தி‌‌ன்போது மேற்கூறிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். ‌சில சாலைகளில் போக்குவரத்துநிறுத்தப்படும்.

 

குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும். வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை களிமண், கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள்.

காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் என்று அமர்க்களப்படுத்துவார்கள்.

 

ஒரு காலத்தில் ஏழுமலையான், கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம்இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியது மட்டுமல்ல யானைக் கவுனியிலும் அவர் யாரிடமோ கடன்பட்டிருக்கிறார் என்பது இன்றளவும் இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே  தெரிந்த கதை.

 

அதே சமயத்தில் லாஜிக்கான  இன்னொரு கதையும் சொல்கிறார்கள்அப்போதெல்லாம் சென்னையைக் Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!