சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்..! | நா.சதீஸ்குமார்

 சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்..! | நா.சதீஸ்குமார்

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்தே சென்னையை விட்டு விலகிய இந்த புயல் இன்று காலையில் எங்கு உள்ளது? இதனால் யாருக்கு மழை பெய்யும்? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக மாறியது. . இந்த புயல் இன்றுதெற்கு ஆந்திரா கடற்கரையில் நெல்லூருக்கும்-மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.

இந்த புயல் நேற்று சென்னை அருகே நிலை கொண்டிருந்தது. மிகவும் மெதுவாக 8 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததது.

சாலைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டனர்.

சென்னையில் 162 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக அங்கு மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் மழை என்பது குறைய தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் சென்னை அருகே நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது தான். இதனால் சென்னையில் மழை என்பது குறைந்துள்ளது.

நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது சென்னையில் இன்று காலையில் மழை இல்லை. இருப்பினும் மழை நீர் என்பது பல சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு பொதுபோக்குவரத்து உள்பட பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தான் மிக்ஜாம் புயல் எங்கு உள்ளது? என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று காலை 4.30 மணியளவில் மிக்ஜாம் புயல் என்பது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு வடகிழக்கு திசையில் 30 கிலோமீட்டர் தெலைவில், பாபட்லாவில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையின் வடக்கு பகுதியில் இருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் இருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அதோடு புயல் கடந்த 6 மணிநேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நி புயல் காரணமாக மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது அதிகபட்சாக 110 கிலோமீட்டர் வேகம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதோடு தெற்கு ஆந்திரா பகுதியில் சூறைக்காற்றுடன் கடும் மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...