பிரிட்டன் விசா பெறுவோர் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது! | நா.சதீஸ்குமார்
பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2023 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் பட்டியில் வெளியிட்டது. இந்த புள்ளிவிவர தரவுகளின்படி, திறன்மிக்க தொழிலாளர்களுக்கான நுழைவு இசைவு பிரிவில் மட்டுமின்றி, மருத்துவச் சேவை பணிக்கான விசா பிரிவிலும் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவச் சேவை பணியாளர்களுக்கு பிரிட்டன் அளித்துள்ள விசா ஒப்புதலைப் பொருத்தவரை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கு மேல் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் 38,866 மருத்துவச் சேவை பணியாளர்களுக்கு விசா அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நிகழாண்டில் 1,43,990 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை அடுத்த இடங்களில் நைஜீரியா, ஜிம்பாப்வே போன்ற நாடுகள் உள்ளன.
மேலும், திறன் மிக்க தொழிலாளர்கள் விசா பிரிவைப் பொருத்தவரை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட விசா 11 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
ஆண்டில் இந்தியர்களுக்கு 20,360 விசாகள் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் 18,107 விசாகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த விசாப் பிரிவிலும் இந்தியர்களே முன்னிலையில் உள்ளனர்.
கல்வி உதவித் தொகையுடன் கூடிய உயர்கல்வி விசா பிரிவைப் பொருத்தவரை நிகழாண்டில் 1,33,237 விசாகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம், அதாவது 5,804 விசாகள் கூடுதலாகும்.
2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 5 மடங்கு அதிகமாகும். இந்த பிரிவின் கீழ் வழங்கப்பட்ட மொத்த விசாகளில் இந்தியர்கள் மட்டும் 27 சதவீத பங்கை வகிக்கின்றனர். சுற்றுலா விசா பிரிவிலும் 27 சதவீதத்துடன் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அடுத்த இடங்களில் சீனா (19%), துர்கி (6%) நாடுகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நாட்டினரின் எண்ணிக்கையில் 43,445 விசாகளுடன் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்தப்பிரிவில் 60,506 விசாகளுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது.