திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்..! | நா.சதீஸ்குமார்

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்..! | நா.சதீஸ்குமார்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், ஏகப்பட்ட ஸ்பெஷல் சிறப்புக்களை கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

அதிலும், கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் அங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும், இந்த முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 12-ந் தேதி தொடங்கிய இந்த கந்த சஷ்டி விழாவானது நாளை 19-ந் தேதி வரை நடக்கிறது.. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது இன்று 18-ந் தேதி நடைபெற உள்ளது..

இதையடுத்து, இன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஜி.லட்சுமிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மொத்த திருச்செந்தூருமே விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.. தொடர்ந்து பக்தர்கள் திரண்டு வருவதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரம்: இதனிடையே, சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை முதல் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை நவம்பர் 18 ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு 18.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன் படி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நான்கு மதுபானக் கடைகள் மட்டும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...