முத்தையா முரளிதரனின் பயோபிக் 800 ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி   ரிலீஸ்..! | நா.சதீஸ்குமார்

 முத்தையா முரளிதரனின் பயோபிக் 800 ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி   ரிலீஸ்..! | நா.சதீஸ்குமார்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீபதி, கனிமொழி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது 800 படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 800 திரைப்படம் அக்டோபர் 6ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர். மேலும், இந்தப் படத்தில் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் முத்தையா முரளிதரனின் குடும்பமும் ஒன்று. இலங்கையில் வளர்ந்த முத்தையா முரளிதரனுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால், அவர் இலங்கை கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்தார். அப்போது அவர் சந்தித்த சிக்கல்களையும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆன பிறகு பந்துவீச்சாளராக எதிர்கொண்ட சிக்கலான தருணங்களையும் அவர் எப்படி கடந்து வந்தார் என்பதை 800 திரைப்படம் அழகாக காட்சிப்படுத்தி உள்ளது.

இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அவர், அவர் இந்த படத்தில் நடிக்கக்கூடாது என சர்ச்சை எழுந்ததால், அவர் இந்த படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடத்த நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்தார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியில் வெளியான இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 2-ம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...