இதுதான் இந்துமதம்!

 இதுதான் இந்துமதம்!

இதுதான் இந்துமதம்!

எல்லோருக்கும் கூடுதலாக ஒரு நாள் வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் தம் வாழ்நாளில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. நீங்கள்  இதை படிப்பதும் கூட அந்த ஆசையின் ஒரு வகையான வெளிப்பாடுதான்.

அப்படி நாம் கூடுதலாக வாழும் நாளும், இப்போது வாழும் கணமும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மேலும் மேலும் தகவல்களை (Information ) அறிவதில்தான் நமக்கு எத்தனை எத்தனை இன்பம் !!! பணத்தால் கிடைக்காதது, அறிவினால் கிடைக்கிறது எத்தனை கோடி என்பான் வைத்தாய் இறைவா என பாரதி சும்மாவா சொன்னார்?

வாழ வேண்டும் எனும் ஆசை “சத்”. ஆகும் . நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை “சித் ” என வேதங்கள் சொல்கின்றன. நிறையஆள் வாழவேண்டும், நிறையன் தகவல்களை தெனறிந்து கொள்ள வேண்டும் (நான் நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை , என்பதை கவனிக்கவும் ), அதுவும் சந்தாஷமாக இருக்கு வேண்டும். இதுதான் ஆனந்தம். இதைத்தான் இந்து மதம் “சத்சித்தானந்தம் ‘ என்கிறது.

சத் , சித் , ஆனந்தம். இதுதான் இந்துமதத்தின் பல பரிமாணங்களில் ஒரு முக்கியமான சாராம்சம். Quora கூட பகவத் கீதை போல ஒரு தேடலே!

நமது அறிவிற்கு புலப்படாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதனால்தான் வேதங்கள் எல்லாவற்றையும் ” மாயா ” என்று கூறுகின்றன. இந்து மதத்தை பொறுத்த வரை எல்லாமே “மாயா” தான் . நவீன விஞ்ஞானம் இன்று கண்டுபிடித்த “சிமுலேஷன் ” அல்லது “virtual Reality ” போன்ற கண்டுபிடிப்பை அன்றே சொன்னது “இந்து மதம்”. அதுதான் மாயா.

நடராஜர் சிலை வடிவம் நமக்கு பல உண்மைகளை சொல்கிறது . அதில் ஒன்று அனைத்தும் ஒரு வித நடனம் . ருத்ரம் சமகம் சொல்லும் துகள்களின் நடனம் . “A Cosmic Dance of Shiva” . இந்த பிரபஞ்சமே particles நடனம். நாம் வெறும் Molecule களின் கூட்டமைப்பு !

எல்லாம் “Empty space”. வெற்றிடம். சக்தியின் நடனம் தான் நாம் காணும் பெருட்கள். உண்மையில் அனைத்தும் மாயா . இதுதான் இந்து மதம் சொல்லும் உண்மை .மாயா என்னும் தத்துவத்தை வேதங்கள் ஒரு கதை மூலம் விளக்குக்குகின்றன .

அவர் ஒரு சிறந்த ஆனால் வயதான விவசாயி. நோய் வாய்ப்பட்டிருந்த அவர் ஒரு நாள் இறந்துவிட , அவர் மூன்று மகன்களும் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அடுத்த நாள் அவர் எழுதிய உயிலை எடுத்து பார்த்தனர்.

உயிலில் “எனது சொத்தில் இரண்டில் ஒரு பங்கு எனது முதல் மகனுக்கும், மூன்றில் ஒரு பங்கு எனது இரண்டாவது மகனுக்கும் ஒன்பதில் ஒரு பங்கு எனது மூன்றாவது மகனுக்கும் சேர வேண்டியது “ என எழுதி இருந்தது.

உயிலை படித்ததும் மூன்று மகன்களும் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். காரணம் தந்தை விவசாயியிடம் இருந்ததோ 17 பசுக்கள் மட்டுமே! இதை எப்படி பிரிப்பது ? 17 இரண்டாகவோ மூன்றாகவோ ஒன்பதில் ஒன்றாகவோ பிரிக்க முடியாதே !சரியாக சொன்னால் அது ஒரு Prime number . நாம் ராமானுஜத்தையா கூப்பிட முடியும்? ஆனால் அவர்கள் உதவிக்கு கணித மேதை ராமானுஜன் வாரா விட்டால்லும், ஒரு துறவி அங்கு வந்து சேர்த்தார்.

அவர் புன்னகையுடன் இப்படி சொன்னார் . எனது ஆஸ்ரமத்தில் ஒரு பசு இருக்கிறது . உங்கள் பதினேழு பசுக்களுடன் எனது ஒன்றையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது 18 பசு ஆகிவிட்டது. இப்போது பிரியுங்கள்.

முதல் மகனை கூப்பிட்டார் . இங்கே வா . இரண்டில் ஒரு பங்கு . அதாவது இந்தா 18/2, ஒன்பது பசுக்களை முதல் மகனுக்கு கொடுத்தார்.

அடுத்து மூன்றில் ஒரு பங்கு. அதாவது 18/3 ஆறு பசுக்களை இரண்டாவது மகனிடம் கொடுத்தார். அடுத்து ஒன்பதில் ஒரு பங்கு அதாவது 18/9, இரண்டு பசுக்களை மூன்றவது மகனுக்கு கொடுத்தார்.

மூன்றையும் கொடுத்தது போக அதாவது 9 + 6 + 2 = 17 போக அவருடைய ஒரு பசு மட்டும் அங்கே மீதி இருத்தது. அதை அவரே வைத்து கொண்டார் .

அந்த ஒரு பசு அவரிடமே வந்து பின்பு மீண்டும் அவரிடமே சென்றுவிட்டது. அவர்தான் பகவான்அல்லது கடவுள்அந்த பசுதான் மாயா . இதுதான் இந்துமதம்!

தொகுப்பு 

ம.ஸ்வீட்லின்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...