சமையல் டிப்ஸ்
1) சப்பாத்தியோ பூரியோ செய்யும் போது அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து மாவு பிசைந்தால் மிகவும் ருசியா
இருக்கும் .
2) தேங்காய் சட்னி மிகவும் ருசியாக இருக்க பாதி தேங்காயும் பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால்
சட்னி நொடியில் காலியாகி விடும் உங்கள் வீட்டில்.
3) எந்த இனிப்பு பலகாரம் செய்தாலும் அதில் சக்கரை அளவை குறைத்து கொண்டு கற்கண்டை பொடித்து
சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும் .
4) இட்லி சாம்பாரில்:- கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு
பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு, மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக
இருக்கும்.
5) அவரைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய் என எந்த பொரியல் கொஞ்சம் சீரகத்தை பொடி செய்து
தூவி இறக்கினால் மணமுடன் சுவையும் அருமையாக இருக்கும் .
—
ஹேமலதா சுந்தரமூர்த்தி