தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி!
தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி!
பிக்பாஸில் கமலின் பஞ்சாயத்து ஞாயிற்று கிழமையன்றும் தொடர்ந்தது.
அப்போது விக்ரம் கேப்டனாக செயல்பட்ட விதம் குறித்து விவாதிக்கப் பட்டது. சகப் போட்டியாளர்கள் விக்ரம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
விக்ரம் கேப்டன்ஷிப் குறித்து கமல் கூறியதாவது, நானே இந்த முடிவை எடுக்கிறேன் என்று நீங்கள் அன்று நடந்த ஸ்டிரைக் பிரச்னைக்கு முடிவெடுக்க கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. நான் சொல்ல நினைப்பது ஒரு சிரமான கருத்தாகவும் இருக்கலாம். அதைப்பற்றி கவலைப்பட்டால், நாம் அந்த பொறுப்புக்கு நாம் தகுதி இல்லை என்று அர்த்தம்” என்றார் கமல்.
விஷ்ணு மற்றும் விசித்ரா இருவருக்கும் மனதிற்குள் ஜோவிகா மீது வன்மம், அவ்வப்போது ஜோவிகாவை போட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
ஜோவிகா யாரையும் மரியாதை கொடுத்து பேசுவது இல்லை, என்னை வாடா போடான்னு கூறுகிறார்” என்று கமலிடம் விஷ்ணு கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோவிகாவிடம் “நீங்கள் வாடா போடா என்று கூறுவது மரியாதை குறைவான சொல். நீங்கள் அடுத்தவர்களை மரியாதை குறைவாக பேசும்பொழுது உங்களின் மரியதையும் குறைந்து உங்க சேஃப்டியும் குறையும். ஆகவே மரியாதை என்பது முக்கியம்” என்றார் கமல்.
இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது. அதற்கு பவா செல்லதுரை நடுவில் போனது காரணம். அதனால் மாயா காப்பாற்றப்பட்டார்.
இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விஷ்ணு, விக்ரம், வினுஷா, பிரதீப், பூர்ணிமா, மாயா இந்த ஆறு பேரையும் தேர்வு செய்கிறார் கேப்டன் யுகேந்திரன்.
இறுதியாக புத்தகம் பரிந்துரை செய்தார் கமல். “இந்த வாரம் நான் பரிந்துரை செய்கிற புத்தகத்தின் பெயர், ’சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’. இதை எழுதியவர் திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர் தனது ஐ ஏ எஸ் பரீட்சையை முதன்முதலில் தமிழில் எழுதியவர். இந்த புத்தகத்தை நான் ஏன் பரிந்துரை செய்கிறேன் என்றால், நான் அடிக்கடி வலியுறுத்தும் கருத்தான, திராவிடமானது நாடு தழுவியது என்பதை இந்த புத்தகம் வெகு அழகாக சொல்லுகிறது. சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்ட நகர் பெயரெல்லாம் அப்படியே இப்புத்தகத்தில் இருக்கிறது. பொற்கை, வஞ்சிக்கோட்டை, தொண்டி என்று கிட்டதட்ட 400, 450 ஊர்களை இந்த புத்தகம் நமக்கு தெளிவு படுத்துகிறது என்றார் கமல்.