என்னா ஆட்டிட்யூட் காட்றாங்க…ப்பா பிக்பாஸ் அட்ராசிடிஸ்! | தனுஜா ஜெயராமன்
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக துவங்கி நடைப்பெற்று வருகிறது.
நிகழ்ச்சியின் 4 வது நாளான அன்று Know your Housemates என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூர்ணிமா ரவி மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பங்கேற்கின்றனர். இதில் பேசும் பூர்ணிமா, கூல் சுரேஷ் பேச்சைக் குறிப்பிட்டு, இது டிபேட் நிகழ்ச்சி, என்னுடைய பாயிண்டை அவரும், அவருடைய பாயிண்ட்டை நானும் விமர்சிக்க வேண்டும். கூல் சுரேஷ் ஏதோ மேடை பேச்சாளர் மாதிரி நான் இதை பண்ணேன், அதை பண்ணேன் என்று பேசுகிறார் என்றார்.
அப்போது விஷ்ணு நடுவில் வந்து என்னதான் இருந்தாலும் நீ தோத்துட்டன்னு பூர்ணிமாவை வெறுப்பேற்றுகிறார்.
முதல் நாளில் இருந்தே விஷ்ணு மற்றும் ப்ரதீப் இருவருமே ஓவர் ஆட்டிடியூட் காட்டி வருவதாக நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.
விசித்ரா மற்றும் நிக்சன் இருவருக்கும் முட்டை குழம்பு குறித்த ப்ரச்சனை கிளம்புகிறது. நீ இப்படியெல்லாம் என்கிட்ட ஆட்டிட்யூட் காட்டாத என்கிற தொனியில் விசித்ரா பயங்கரமாக நிக்சனிடம் ஆட்டிட்யூட் காட்டுகிறார். இதனை புரிய வைக்க முயன்ற யுகேந்திரனிடமும் , ஐஷூ விடமும் விதண்டாவாதம் செய்கிறார்.
கூல் சுரேஷ் , விஷ்ணு, ப்ரதீப் குரூப் பெண்களை மேக்கப் விஷயமாக க்ரோ செய்கிறது. இவர்கள் மூவரும் சகப்பெண்களிடம் பேசும் முறைகளும், நடத்தும் விதமும் பார்க்க கொஞ்சமும் நன்றாகவேயில்லை. பர்ஸனல் அட்டாக் செய்வதாக தோன்றுகிறது.
இவர்கள் மூவரும் ஒரே மனநிலை உடையவர்களாக இருப்பதால் இனி குரூப்பாக செயல்பட்டாலும் ஏதும் ஆச்சர்யமில்லை.
இந்த எபிசோடும் சுவராஸ்யமற்று மற்றுமொரு நாளாக கடந்து போகிறது..