சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்..! | தனுஜா ஜெயராமன்

 சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்..! | தனுஜா ஜெயராமன்

சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் உலகம் முழுவதும் படம் வெளியானது. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் போல் இருக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படமானது முழுமையான திருப்தியை தரவில்லை.

இதன் காரணமாக படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. குறிப்பாக லாரன்ஸையும், கங்கனா ரணாவத்தையும் பலரும் வலைதளத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது நவம்பர் அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை எட்டு கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...