குழ்ந்தை சிரித்தது
குழ்ந்தை சிரித்தது !
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களின்
பிறந்த தினம் இன்று
(05 – 10 – 1823)
பிறந்த ஐந்தே திங்களான குழந்தை,
தந்தை அருகிலிருக்க
தாய் அருகிலிருக்க ,
உலகம் ஓசைபட ,
ஆண்டவன் ஆனந்தத்
தாண்டவமாட ,
திருத்தில்லையிலே,
நடராசர் சன்னதியிலே ,
திரைவிலக்க,
அப்பைய்யர் தீட்சர் ஆராதனை செய்கையில்
நடராசர் சன்னதியை நோக்கிக் கல கலவெனப் புன்னகை
பூரிக்க அப் பச்சிளங்குழந்தை சிரித்தது.
கண்டோர் எல்லாரும்
வியந்தனர்,
கொண்டோர் குதூகலித்தனர்,
ஆராதித்தோர்
அதிசயித்தனர்.
பசி எடுத்தால் அழும்,
பார்த்தமுகமானால் சிரிக்கும் ,
வேறுமுகமானால் வீரிட்டு அழும்,
தில்லைக்கு முன்பின்
செல்லாத குழந்தை,
திரு உருவைக் காணாத குழ்ந்தை ,
கண்டோர் வியக்க சிரிக்க காரணம் என்ன?
உலக வரலாற்றிலே கடவுளுக்கு உருவம் இல்லாது
இருக்கும் இடம் சிதம்பரம் தில்லை நடராசர் சன்னதியாகும் .
அங்கே உருவமுள்ள பல பொம்மைகளை வைத்து வழிபாடு
செய்கிறார்களே எனறு நினைத்து சிரித்தது .
கடவுளுக்கு உருவமில்லை என்பதை நம் முன்னோர்கள்
அறிந்து,
சிதம்பர ரகசியம் என்பதை திரைபோட்டு மறைத்து
வைத்துள்ளார்களே என்பதை பார்த்து சிரித்தது.
உருவமற்ற ஒளியான
உண்மைக் கடவுளை
எனக்கு
காட்டிவிட்டாயே
என்பதை எண்ணி சிரித்தது,
எல்லா
உலகத்திற்கும் இந்த உண்மையை பறைசாற்றுவேன்
என்பதை நினைத்து சிரித்தது.
உண்மை ஒளியான அருட்பெருஞ்ஜோதியை உலகம்
முழுவதும் காணவைப்பேன் என்பதை சிரிப்பின் மூலம்
தெரியப்படுத்தி சிரித்தது.
அந்த அருட் குழந்தைதான்
பகுத்தறிவின் உச்ச நட்சத்திரம்
திரு அருட்பிரகாச வள்ளலார்!
sugumar