உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி துவங்குகிறார்! | தனுஜா ஜெயராமன்
அகமதாபாத்தில் இன்று தொடங்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே போட்டி நடக்கும் இடம் நாள் நேரம் குறித்த அட்டவணைகள் வெளியாகி உள்ளது
இன்று நடைபெற இருக்கும் தொடக்க போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.
இதற்கு முன்பு மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி மாநகரங்களில் மட்டுமே முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின . முதன் முறையாக இப்போது அகமதாபாதில் தொடங்க இருப்பது புதிய முயற்சி.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில், உலகக் கோப்பையின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டத்தில், முதலாவது பந்தை வீசி பிரதமர் நரேந்திர மோடியே தொடங்கி வைக்கிறார்.
பல்வேறு நாடுகளில் அதிபர்களோ, பிரதமர்களோ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி தொடங்கி வைப்பதால்
கிரிக்கெட் ரசிகா்கள் மட்டுமல்லாமல், பிரதமரின் ஆதரவாளா்களும் உற்சாகத்தில் திளைக்கிறாா்கள்.