சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்

 சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்

கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம்  விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் திரையரங்கினில் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது.

சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் அப்படத்துக்காக காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.

சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. இந்தச் சூழலில், ‘சித்தா’ படம் தொடர்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்க நிர்வாகங்கள் ’சித்தா’ படத்துக்கான காட்சிகளை அதிகரித்துள்ளன.

மேலும் சித்தா’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் சித்தா திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி உலகம் முழுவதும் ரூ.11.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...