ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு போட்ட டிவிட் ஒன்று பரபரப்பினை கிளறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான ZOHO தலைவரும், நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு போட்ட டிவிட் ஒன்று ஐடி துறையினர் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சம்பள உயர்வு இல்லாமல் தவிக்கும் ஐடி ஊழியர்களுக்கு இவருடைய பதிவு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்.
ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், செப்டம்பர் மாதம் அனைத்து நாடுகளிலும், அனைத்து ப்ராடெக்ட்களிலும் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதை பார்க்கிறோம். இது வருவாய் அளவிலும் இதன் தாக்கம் எதிரொலி்கிறது. சர்வதேச பொருளாதாரம் மோசமான நிலையை எட்டுகிறது என நான் நினைக்கிறேன். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது என்று பதிவு செய்துள்ளார்.
பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கடுமையான விலைவாசி பிரச்சனையால் மாடிக்கொண்டு உள்ளது. இதோடு சீனாவில் நுகர்வு அதிகளவில் பாதித்துள்ளது. மேலும மக்களின் கடன் அளவு உலகம் முழுக்க அதிகரித்து வருவதால் நிதி ஸ்திரதன்மையும் பாதித்துள்ளது.
சர்வதேச அளவில் இருக்கும் பணவீக்கம் மற்றும் வட்டி விகித அழுத்தங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு வரையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.