ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் , ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ராணா இணைந்துள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், படக்குழு குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக செப்டம்பர் 30-ம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்தது. இப்படம் குறித்த அப்டேட்கள் அடிக்கடி வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் ராணா இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாகுபலி உடபட பலபடங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் கலக்கிய ராணா இத்திரைப்படத்தில் என்ன மாதிரியான ரோலில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.