அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”! | தனுஜா ஜெயராமன்

 அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”! | தனுஜா ஜெயராமன்

ஈரம் என்கிற ஹாரர் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது சப்தம் திரைப்படத்திற்காக. இந்த திரைப்படம் இவர்களின் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”.

ப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

திரில்லர் படங்களை தனக்கே உரிய திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்ப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விரைவில் “சப்தம்” படத்தின் போஸ்டர், டீஸர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். சப்தம் படம் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...