“எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் இசையமைப்பாளர் கலாசரண். இப்பட விழாவில் அவர் கலந்து கொண்ட போது இந்த படத்திற்கு இசையமைக்க நேர்ந்த போது ஏற்பட்ட அனுபவங்களையும் படத்தில் பாடிய புதிய முகங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதிலிருந்து …இந்தப் படத்தில் கடைசி டெக்னீசியனாக இணைந்தது நான்தான்.. சொல்லப்போனால் மொத்த படத்தையும் எடுத்து முடித்துவிட்டுத் தான் என்னிடம் வந்தார்கள்.. பாடல்களுக்கு கூட மாண்டேஜ் காட்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு பாடல்களை உருவாக்க சொன்னார்கள். அதே சமயம் எனக்கு வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்தார்கள்.
இந்த படத்தில் இரண்டு பாடல்களை பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் பிக்பாஸ் புகழ் அபிஷேக் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அபிஷேக் ராஜா என் இசையில் ஏற்கனவே சில ஆல்பம் (சுயாதீன) பாடல்களை பாடியுள்ளார்” என்றார்.