MY3 வெப் சீரிஸ் இன் டிரெய்லர் வெளியானது…
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் சீரிஸ் My3 விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அந்த வெப்சீரிஸின் பிரத்தியேக புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ராஜேஷ். எம் தயாரிப்பாளரின் டார்ச்சர் தாங்க முடியாமல் வெப்சீரிஸ்க்கு என்ன கதையை யோசிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நடிகர்களாக அவரிடம் வர அவர்கள் பேசுவதை வைத்து அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்குவது போல காமெடியான ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த வெப்சீரிஸில் பிக் பாஸ் முகேன் தொழிலதிபராக நடித்துள்ள நிலையில் அவருக்கு எந்த ஒரு மனிதர் தொட்டாலும் அலர்ஜி ஆகிவிடும் என்கிற கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவாக நடிக்கும் அடுத்ததாக வரும் நடிகை ஹன்சிகா வந்ததும் வராததுமாக எங்கே என் கேரவன் எனக் கேட்கிறார். லூசு ஹீரோயின் என வழக்கம்போல ஹன்சிகாவுக்கு கொடுக்கும் கதாபாத்திரம் போல இயக்குனர் கலாட்டா செய்ய எனக்கு ரொம்ப இன்டெலிஜென்ட் ஆன கேரக்டர் குடுங்க அப்படின்னு ஹன்சிகா கேட்க உங்கள ரோபோவா ஆக்கிடுறேன் என ஒரே போடாக போடுகிறார்.
ஹன்சிகாவிற்கு பிறகு இயக்குனரை வந்து சந்திக்கும் நடிகர் சாந்தனு இந்த வெப் சீரிஸ் ஏதாவது எனக்கு பெரிய கேரக்டர் இருக்குமா சார் என்றும் ஹன்சிகாவுடன் எனக்கு எத்தனை இன்டிமேட்டான காட்சிகள் எனக்கேட்க உங்களுக்கும் ஹன்சிகாவுக்கும் ஒரு சீன் கூட இல்லை ஏதாவது பல்பு கொடுக்கிறார்.
கடைசியாக நடிகர் சாந்தனுவுக்கு இந்த வெப் சீரிஸில் சயின்டிஸ்ட் கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. அவர் உருவாக்கும் ஒரு ரோபோ தான் ஹன்சிகா. ஆனால், ரோபோ சரியாக உருவாகாத நிலையில், அவரது காதலியான ஹன்சிகாவை முகேனுக்கு விற்று விட அதன் பின்னர் நடக்கும் கலாட்டா தான் இந்த வெப்சீரிஸ் என டீசரையும் வெளியிட்டுள்ளனர். இது அந்த கொரியன் வெப்சீரிஸின் காப்பி தானே என அபிஷேக் கலாய்க்க, இல்லைப்பா அதே கொரியன் சீரியஸின் அதிகாரப்பூர்வ ரைட்ஸ் வாங்கி ரீமேக் செஞ்சிருக்கேன் என ராஜேஷ் எம் கூறுகிறார். வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் இந்த வெப்சீரிஸ் வெளியாகிறது.