யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…

 யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படங்களில் ஒன்று ’மிஸ் மேகி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படப்பிடிப்பின் கடைசி நாளில் படக்குழுவினர் அனைவரும் பிரியாணி தயார் செய்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் யோகி பாபு, ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா நடிப்பில் உருவாகிய இந்த படத்தை லதா மணியரசு என்பவர் இயக்கியுள்ளார். கார்த்திக் இசையில், கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...