வரலாற்றில் இன்று (13.09.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று? | Today History in Tamil

செப்டம்பர் 13 (September 13) கிரிகோரியன் ஆண்டின் 256 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 257 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 109 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1229 – ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றான்.
1437 – போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ர எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
1541 – மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கு நோக்கில் ஜெனீவா திரும்பினார்.
1584 – எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் அக்ட்டி முடிக்கப்பட்டது.
1609 – என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.
1743 – பெரிய பிரித்தானியா, ஆஸ்திரியா, சார்தீனிய இராச்சியம் ஆகியன அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
1759 – ஏழாண்டுப் போர்: கனடாவின் கியூபெக் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சிய-எசுப்பானியப் படைகள் ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகையை ஆரம்பித்தன.
1788 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவர் தேர்தலுக்கான திகதி பிலடெல்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக நியூயோர்க் நகரம் அறிவிக்கப்பட்டது.
1791 – பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.
1898 – அனிபால் குட்வின் செலுலாயிடு புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.
1899 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தானுந்து விபத்து உயிரிழப்பு இடம்பெற்றது.
1923 – எசுப்பானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
1949 – இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐசுலாந்து, யோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
1953 – நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956 – ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை முதல் தடவையாக அறிமுகப்படுத்தியது.[1]
1968 – பனிப்போர்: அல்பேனியா வார்சா ஒப்பந்த அமைப்பில் இருந்து விலகியது.
1971 – மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
1971 – நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – பிரேசில் மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட கதிரியக்கப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியால் உயிரிழந்தனர்.
1989 – டெசுமான்ட் டுட்டுவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார்.
2001 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவில் விமான சேவைகள் ஆரம்பமாயின.
2007 – பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2008 – தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
2013 – தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானித்தான் எராட் நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது தாக்குதலை நடத்தியதில், இரண்டு காவல்துரையினர் கொல்லப்பட்டனர்.
2018 – மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.

பிறப்புகள்

1853 – ஆன்சு கிறிட்டியன் கிராம், தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (இ. 1938)
1886 – ராபர்ட் ராபின்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1975)
1912 – ஒரேசு வெல்கம் பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 2003)
1916 – ரூவால் டால், உவெல்சு-ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1990)
1929 – கோ. சி. மணி, தமிழக அரசியல்வாதி (இ. 2016)
1960 – கார்த்திக், தென்னிந்திய நடிகர்
1960 – கெவின் கார்ட்டர், தென்னாப்பிரிக்க ஊடகவியலாளர் (இ. 1994)
1960 – நல்லாரி கிரண் குமார் ரெட்டி, ஆந்திராவின் 16வது முதலமைச்சர்
1969 – ஷேன் வோர்ன், ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்
1971 – கொரான் இவானிசெவிச், குரொவாசிய தென்னிசு வீரர்
1989 – தோமா முல்லர், செருமானியக் கால்பந்து வீரர்

இறப்புகள்

81 – டைட்டசு, உரோமைப் பேரரசர் (பி. 39)
1598 – இரண்டாம் பிலிப்பு, எசுப்பானிய மன்னர்]] (பி. 1526)
1929 – ஜத்தீந்திர நாத் தாஸ், இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1904)
1936 – யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன், செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1865)
1941 – போரிசு வசீலியேவிச் நியுமெரோவ், உருசிய வானியலாளர், புவி இயற்பியலாளர் (பி. 1891)
1944 – நூர் இனாயத் கான், பிரித்தானிய சிறப்பு உளவுப் பிரிவின் இரகசிய உளவாளி (பி. 1914)
1975 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1897)
1996 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக்கலைஞர் (பி. 1971)
1999 – பெஞ்சமின் புளூம், அமெரிக்க உளவியலாளர் (பி. 1913)
2009 – அரங்க முருகையன், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)
2010 – ஆர். சூடாமணி, தமிழக எழுத்தாளர் (பி. 1931)
2012 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21-வது தலைமை நீதிபதி (பி. 1926)

சிறப்பு நாள்

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!