இரண்டாகும் பிக்பாஸ் வீடு! தனுஜா ஜெயராமன்

 இரண்டாகும் பிக்பாஸ் வீடு! தனுஜா ஜெயராமன்

முந்தைய சீசன்களைப் போல வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் என புரோமோவிலேயே அறிவித்துவிட்டனர். ….இந்த சீசன்ல  ரூல் ஃபாலோ பண்ணாதவங்களுக்கா அல்லது நாமினேஷன் பட்டியல்ல இடம் பிடிக்கிறவங்களுக்கா… அந்த வீடு யாருக்குனு இன்னும் முடிவாகலை என ஆருடம் சொல்கிறார்கள்.

இதனால் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படி அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் ஆண் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்றும் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது

நடிகை ஓவியா, ஆரி, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அசீம் உள்ளிட்ட பலரது பெயர்கள் அந்தப் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த சீசனின் தொடக்க நாள்களில் இவர்கள் நிகழ்ச்சிக்குள் செல்ல ரொம்பவே வாய்ப்பிருக்கிறதாம். இவர்களை அந்த இரண்டாவது வீட்டுக்குள் அனுப்புவார்களா? இவர்கள் பிக் பாஸ் வீட்டில் தங்குவார்களா? அல்லது கெஸ்ட் போல போய்விட்டுத் திரும்பி விடுவார்களா?என்பது குறித்தெல்லாம்  இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள் சின்னதிரை வட்டாரத்தினர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...