ஜவான் படம் ஏழு படத்தை நினைவு படுத்துகிறது… ரசிகர்கள் ட்ரோல்! | தனுஜா ஜெயராமன்

 ஜவான் படம் ஏழு படத்தை நினைவு படுத்துகிறது… ரசிகர்கள் ட்ரோல்! | தனுஜா ஜெயராமன்

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனில் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜவான் படத்தை பார்த்தால் மெர்சல், ரமணா, பாகுபலி, இந்தியன், சர்கார், சர்தார், கத்தி, மங்காத்தா, தெறி, Kung Fu Hustle என பல படங்கள் நினைவுக்கு வருகின்றன என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஆனால் அட்லி படம் விஷுவல் ட்ரீட் தான் என்கிறார்கள் சிலர். எப்படி இருந்தாலும் வழக்கம்போல தனது படத்தை டாப் ரேன்சில் ரசிகர்களுக்கு ஏற்ற விசுவல் ட்ரீட்டாக இயக்குனர் அட்லி கொடுத்து அசத்தி விட்டார்.

அட்லீக்கு ஆதரவாக ஏகப்பட்ட ரசிகர்கள் ஜவான் படத்தை பாராட்டியும் வருகின்றனர். ஆனாலும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அவர் ரசிகர்கள் அதற்கு விளக்கம் கொடுத்தும் வருகின்றனர்.

இயக்குனர் அட்லியின் முந்தைய படங்களுக்கும் இதேபோன்ற காப்பி குறித்த ட்ரோல்கள் சமூக வளைதளங்களில் எழுந்தாலும் அந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூலை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பொறுத்தவரை அஜித்தின் ஆரம்பம் படத்தின் கதையை அப்படியே உள்டா செய்து எடுத்து வைத்துள்ளார் என அட்லீ ரசிகர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர்…

இந்நிலையில் இப்படி ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருப்பது ஜவான் வசூலுக்கு பாதிப்பாக அமையும் என்ற கருத்துக்களும் இப்போது எழுந்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...