வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹாருக்கின் “ஜவான்” திரைப்படம்! | தனுஜா ஜெயராமன்

 வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹாருக்கின் “ஜவான்” திரைப்படம்! | தனுஜா ஜெயராமன்

பாலிவுட்டின் ஷாருக்கான் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களே இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை பார்த்து உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் வார முடிவிலேயே எத்தனை படங்களின் ரெக்கார்டுகளை ஜவான் முறியடிக்கப் போகிறதோ தெரியவில்லை என திரையுலகினர் பேசிவருகின்றனர்.

இதற்கு முன்பு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான பதான் திரைப்படம் முதல் நாளில் 65 கோடி ரூபாயை இந்திய அளவில் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் நேற்று வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 75 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி உலக அளவில் ஜவான் திரைப்படம் முதல் நாளில் 100 கோடி ரூபாயை தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 140 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக பல அப்டேட்கள் குவிந்துள்ளன.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...