தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் திடீரென கைது !

 தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் திடீரென கைது !

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

லிப்ரா புரொடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிந்தர் சந்திரசேகரன், கடந்த ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது ட்ரெண்டாகியது. திருமணத்திற்கு பிறகு இணையதளத்தில் பிசியாக இருந்து வந்த ரவிந்தர் சந்திரசேகரன், தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார்.

இவர் மீது ஏற்கனவே சில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக பங்குதாரராக சேர்ந்து கொள்ளுமாறு கூறி ரூபாய் 16 கோடி பெற்று ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து பாலாஜி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தயாரிப்பாளர் ரவீந்திரன் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்குவதாகக் கூறி போலி ஆவணங்களைக் காண்பித்து சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் 15 கோடியே 8 லட்சத்தி 32 ஆயிரம் பெற்றுக்கொண்டு, இந்த திட்டம் தொடர்பாக எதையுமே ஆரம்பிக்காமல், வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது உறுதியானது. புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் ரவீந்திரனை அதிரடியாக போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...