இன்று திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்

 இன்று திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என். அவரது நூற்றாண்டு விழா இன்று 8ம் தேதி, சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடை பெற உள்ளது.

திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது. டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை வழங்க, ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, கி.வீரமணி விழாவுக்கு தலைமை தாங்க இருக்கிறார்.

பத்மா சுப்ரமணியம், விஜயா தாயன்பன், சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே,
ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி செட்டி, நடிகை சச்சு, இவர்கள் முன்னிலையில்.. நடிகமணி டி வி என் உருவ படத்தை, தி மு க செய்தி தொடர்பு தலைவர் டி. கே.எஸ். இளங்கோவன் திறந்து வைக்கிறார்.

டி வி என் வாழ்க்கை வரலாறு முதல் நூலை கி.வீரமணி வெளியிட, ஜி.விசுவநாதன் பெற்றுக் கொள்கிறார்.

விழா மலரை இயல் இசை நாடக மன்றம் தலைவர் வாகை சந்திரசேகர் வெளியிட, முதல் பிரதியை, தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் எம்.நாசர் பெற்றுக் கொள்கிறார்.
இரண்டாவது பிரதியை, தென்னிந்திய நடிகர் சங்கம் இணை தலைவர் பூச்சி எச் முருகன் பெற்றுக் கொள்கிறார்.

டி.கே.எஸ்.இளங்கோவன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
திருநாவுக்கரசு, கோபண்ணா, எம்.நாசர், டிரஸ்கி மருது
ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

டி.வி.என்.விஜய் நன்றி கூற நாட்டுப்பண் உடன் நிகழ்ச்சி நிறைவு பெற உள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...