குன்னக்குடி வைத்தியநாதன்

 குன்னக்குடி வைத்தியநாதன்

குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாளின்று:

🎹குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!

* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்! 😄

அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! smile உணர்ச்சிலை

* அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!

மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!

* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!

*வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!

* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!

* தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட!

uma kanthan

3 Comments

  • கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்பார்கள். குன்னக்குடி கையில் வயலினும் தமிழ் பேசும். செவிகளை மூடிக்கொண்டு கேட்டால் நம்முடன் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். நல்லதொரு கலைஞர்.

  • thanks sir.

  • thanks sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...