இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள படங்கள் குறித்து தெரியுமா?

 இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள படங்கள் குறித்து தெரியுமா?

கிக்:

சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தை கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக தானியா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கருமேகங்கள் கலைகின்றன:

நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன” படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தந்தை – மகன் இடையிலான உணர்வு போராட்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அதிதீ பாலன், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, யோகி பாபு, இயக்குநர்கள் கெளதம் மேனன், ஆர்வி உதயகுமார், எஸ்ஏ சந்திரசேகரன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

பரம்பொருள்:

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள். பழங்கால சிலை திருட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். இப்பாடலின் மூலம் யுவன்ஷங்கர் ராஜாவுடன் முதன்முதலாக இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

குஷி:

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 1ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...