இன்றைய ராசி பலன் புதன்கிழமை 30 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் புதன்கிழமை 30 ஆகஸ்டு 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 13 ஆம் தேதி புதன் கிழமை 30.8.2023,சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 10.45 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று இரவு 09.58 வரை அவிட்டம். பிறகு சதயம். புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் : வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் இன்று காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு மன ஆறுதல் தரும். பணியில் வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் : இன்று உற்சாகமான நாள். சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் நாள் உங்கள் உறுதி மற்றும் தைரியம் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். எதிரிகளை வெல்வீர்கள். நீங்கள் சுயநலமின்றி கடுமையாக உழைப்பீர்கள். இதனால் பணியிடத்தில் சிறப்பாக பணி புரிவீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்களிடம் இருக்கும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும்.

மிதுனம் :  இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது.சிறந்த பலன்களைக் காண நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு ஆறுதல் அளிக்கும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவு அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளைக் கையாளும்போது பொறுமை தேவை. அஜீரணக் கோளாறு இன்று காணப்படும்.

கடகம் : இன்று திருப்தியற்ற நிலை இருக்கும். இது உங்களுக்கு சிறிது கவலை அளிக்கும். அதிகம் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கையாளும் போது கூடுதல் கவனம் தேவை. பணியிடச் சூழல் இனிமையாக இருக்காது. உங்கள் மேலதிகாரியுடன் சில வெறுப்பான தருணங்களை சந்திக்க நேரும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

சிம்மம் : இன்று மிகவும் சிறப்பான நாள். எதிர்பாராத நன்மைகள் காணப்படும். உங்களின் சயோஜித புத்தி கொண்டு இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள். தேவைப்படும் சமயத்தில் பணம் உங்களிடம் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயர்வதைக் காண்பீர்கள். உங்கள் பணியின் தரம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். நீங்கள் இன்று விரைந்து பணியாற்றுவீர்கள். பொதுவாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். வீட்டில் விருந்தினர் வருகை இருக்கலாம். இதனால் நீங்கள் உற்சாகமடைய வாய்ப்புள்ளது. இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணம் சம்பந்தப்பட்ட தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீகச் சொத்து வகையில் பண வரவிற்கு வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் வெற்றியும் அதனால் மகிழ்ச்சியும் காணப்படும். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

துலாம் : இன்று சவாலான நாளாக இருக்கும். உங்களிடம் பதட்டம் காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நிதியைப் பொறுத்தவரை இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று பணிகள் கடினமாக காணப்படும். உங்கள் யுக்திகளை திட்டமிட்டு தொழில் சார்ந்த முறையில் பணியாற்ற வேண்டும்.

விருச்சிகம் : உங்களின் சிறந்த முயற்சிகளிலும் தடைகள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். இன்று உங்களிடம் அமைதியின்மையும் பதட்டமும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும். இன்று பணியில் சிறிது ஏமாற்றம் காணப்படும். பணியில் தவறுகள் செய்ய வாய்புள்ளது. உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இன்று பண வரவு குறைந்து காணப்படும்.

தனுசு  :   இன்று அபாரமான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் ஸ்திரமாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலமாக ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் கூடுதல் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு வகையில் பாராட்டு கிடைக்கும். உங்கள் திறமை மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

மகரம் :  விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். என்றாலும் நீங்கள் தனித்திருப்பது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு தான். இறைவழிபாடு மற்றும் தியானம் ஆறுதல் தரும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இன்று அதிக பண வரவிற்கான வாய்ப்பு குறைவு. குடும்பப் பொறுப்பு காரணமாக இன்று அதிக பணச் செலவை எதிர்கொள்ள நேரும்.

கும்பம் : இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். நீங்கள் சாதகமான பலன்களை எதிர்பார்ப்பீர்கள். வெற்றி பெற வேண்டும் என நினைத்தாலும் அதை அடைவது சிறிது கடினமாக இருக்கும். இன்று அதிர்ஷ்டகரமான நிதி நிலைமை இருக்காது. அதிக செலவுகள் உங்களுக்கு கவலை அளிக்கும். நிதி நிலைமையில் சற்று கடினமான சூழல் காணப்படும். சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். இதனை மறப்பது நல்லது.

மீனம் : இன்று நீங்கள் விரைவாகவும் தீர்மானமாகவும் செயல்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பொது விசேஷங்களில் கலந்து கொள்வதன் மூலம் நண்பர்களைப் பெறுவீர்கள். உங்கள் பணிகளை மேலதிகாரிகள் மதிப்பீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. உங்களின் படைப்பு திறன் காரணமாக உங்கள் திறமை சிறப்பாக வெளிப்படும். சிறு கடன் வகையில் உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...