ரக்ஷா பந்தன்.
1 min read

ரக்ஷா பந்தன்.

ஆகஸ்ட் 30
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரக்ஷா பந்தன்.

நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன், மிகவும் விரும்பப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும்.

வடமாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை தற்போது நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் கிராமங்கள் வரை இந்த பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிட்டத்தக்கது.

ஏன் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது?

புராணத்தின் படி, ஒருமுறை கிருஷ்ண பகவான் தெரியாமல் தனது சுதர்சன சக்கரத்தால் விரலை காயப்படுத்திக் கொள்கிறார்.

இதைப் பார்க்கும் திரவுபதி உடனடியாக ஒரு துணியைக் கிழித்து விரலில் காயம் பட்ட இடத்தில் கட்டிவிட்டு ரத்தம் வருவதைத் தடுக்கிறார்.

உடனடியாக பகவான் கிருஷ்ணன் ஒரு வரம் தருகிறார். எல்லா தீயவற்றில் இருந்தும் திரவுபதியைக் காப்பேன் என்று வாக்குறுதி தருகிறார்.

அதன்படி, சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் தலை குனிந்து நிற்க, கவுரவர்களால் துயிலுரிக்கப்படும் திரவுபதியின் மானத்தைக் காக்க துணியை அளித்துக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ண பகவான்.

இந்த புராணக் கதைப்படி தான் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது என்று கூறப்படுகிறது. ரக்ஷா என்றாலே பாதுகாப்பு என்று தான் அர்த்தம்.

ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது, ராக்கி கயிறு கட்டும்போது, சகோதரிகள் சகோதரர்களின் நெற்றியில் திலகமிடுகின்றனர்.

ராக்கி கட்டி அன்பையும், பிரார்த்தனையையும் சகோதரி தெரிவிக்க சகோதரன் பாதுகாப்புக்கான வாக்குறுதியோடு பரிசையும் கொடுக்கிறார்.

இப்படி தான் ரக்ஷா பந்தன் தினம் உருவானதாக கூறப்பட்டாலும், இதற்கு பல்வேறு புராண கதைகளும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எப்போது கொண்டாடப்படுகிறது..!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த பண்டிகை தொடங்குகிறது.

இந்தாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தங்களுக்கு தெரிந்த, பிடித்த சகோதர்களுக்கு பல வண்ணத்தில் ஆன ராக்கி கயிறுகளை கைகளில் கட்டி மகிழ்ந்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *