இனி 2 G சேவை கிடையாது தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 2ஜி சேவை வாடிக்கையாளர்களை 4ஜி மற்றும் 5ஜி-க்கு கொண்டு வருவதற்காக மிகவும் மவிவு விலையில் ஸ்மார்ட்போன், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்ட் சேவையிலும் 5ஜி சேவை கொண்டு வர ஜியோ ஏர்ஃபைபர் சேவையை செப் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
ஜியோ 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட போதே 4ஜி சேவை மட்டுமான ஸ்பெக்டரம் கொண்டு களத்தில் இறங்கியது.
ஜியோவின் இலவச சேவைகள் மூலம் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை பதிவு செய்த ஜியோ தற்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்து இதை சார்ந்து பல சேவைகளை அறிமுகம் செய்த காரணத்தால் 2ஜி சேவைக்கு மூடுவிழா காண உள்ளது.
ஜியோ 5ஜி சேவை விவசாயம், கல்வி, ஹெல்த்கேர், MSME துறையிலும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் மூலம் அடுத்த 3 வருடத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதேபோல் ஜியோ 5ஜி மற்றும் ஏர்ஃபைபர் மூலம் பொழுதுபோக்கு, டிவி, ஸ்மார்ட் ஹோம் செயலிகள், கேமிங் என பல துறையில் இறங்க உள்ளது. இந்த வேகமான வளர்ச்சி இந்தியாவின் Home Broadband சேவையை மொத்தமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விரைவில் 2ஜி சேவைக்கு மூடுவிழா காண உள்ளது.
ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்து வெறும் 9 மாதத்தில் இந்தியாவில் 96 சதவீத சென்சஸ் டவுன்களில் 5ஜி சேவை செயல்பட துவங்கியுள்ளது, டிசம்பர் 2023 க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யாரும் அசைக்க முடியா இடத்தை ஜியோ 5ஜி சேவையில் பெற உள்ளது.