ஷக்கரவரட்டி/கேரளா ஸ்பெஷல்
கேரளா ஸ்பெஷல்
ஓணம் ஸத்யா எனப்படும் சிறப்பு விருந்தில் இடம்பெறும் 21 வகை உணவுகளும் சிறப்புமிக்கவை.
ஓலன் என்கிற பூசணிக்காய், காராமணி, தேங்காய்ப்பால் கலந்த கூட்டு, காளன் எனப்படும் சேனைக்கிழங்கில் தயாராகும் ஒருவித தொடுகை, பலவிதமான காய்கறிகளைத் தேங்காய் கலந்து வேகவைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும்
அவியல், இஞ்சிப்புளி, ஊறுகாய், தக்காளிப் பச்சடி, பொரியல்கள், வெல்லம் கலந்த சிப்ஸ், பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படங்கள் ஆகியவற்றோடு, அடை, பருப்பு, தேங்காய்ப்பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பாயசங்களும் தலைவாழை இலையில் இடம்பிடிக்கும்.
தலைவாழை இலையில் முதலாவதாக வைக்கப்படும் முக்கிய உணவு, இனிப்பு சுவைகொண்ட இந்த ஷக்கரவரட்டி
. தேவையானவை:-
பெரிய வாழைக்காய் – 4 வெல்லத்தூள் – முக்கால் கப் ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் சுக்குத்தூள் – கால் டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு பொடித்த சர்க்கரை – சிறிதளவு செய்முறை:- வாழைக்காயைத் தோல் சீவி ஒரு செ.மீ கனத்துக்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலரவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும் (நீண்ட நேரம் ஆகும்). எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவைத்து ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரையைத் தூவிப் புரட்டிவிடவும்.
Manjula Yugesh