இது வேற மாறி என ஆஹாவில் ஒஹோவென கலக்கும் வெப் சீரிஸ் !

 இது வேற மாறி என ஆஹாவில் ஒஹோவென கலக்கும் வெப் சீரிஸ் !

ஆஹா ஓடிடி இணையத் தளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’.

பேட்டைக்காளி’, ‘இரத்த சாட்சி’ இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக் களம் கொண்டது.  அந்த வரிசையில் ‘வேற மாறி ஆபிஸ்’ தொடரின் ஒன்லைன் புதியதாகவும், ஜனரஞ்சகமானதாகவும் இருக்கும் என்கிறார்கள்.

 
ஏற்கெனவே ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்தத் தொடர் பெற்றிருக்கிறது.


 
இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள  நெக்சஸ் விஜயா மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.
 
இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்’-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆஹா ஓடிடி’ இது போன்ற தனித்துவமிக்க கதைகளை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறது. எனவே ‘ஆஹா ஓடிடி’–யின் பயனாளர்களாக எல்லோரும் மாறுங்கள். ‘வேற மாறி ஆபிஸ்’க்கு கொடுத்த அதே ஆதரவை எங்கள் தளத்தில் வெளியாகும் எல்லாத் தொடர்களுக்கும் கொடுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்கள் ஆஹா ஒடிடி நிர்வாகத்தினர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...