மருத்துவ மற்றும் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும்!!!
நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகியதும் வேதனையளிக்கின்றன பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன என்றார் முதல்வர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.
அவர்களை சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பாதிக்கபட்ட மாணவனின் மருத்துவ செலவுகள் மற்றும் உயர்கல்வி செலவினை அரசே ஏற்பதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.