இந்த வாரம் ஓடிடியில் இவ்வளவு படங்களா!!!

 இந்த வாரம் ஓடிடியில் இவ்வளவு படங்களா!!!

இந்த வாரம் எந்த திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது என்பது தெரியுமா? அப்ப இதை படித்து தெரிந்து கொள்ளலாமே. திரையரங்கில் ஒடாத பல படங்கள் ஓடிடியில் வரவேற்பு பெறுவதும் உண்டு.

வாராவாரம் வெள்ளிக்கிழமை வந்தால் திரையரங்குகள் மட்டுமல்ல, ஓடிடி தளங்களிலும் புது திரைப்படங்கள் களைகட்ட தொடங்கி விடுகின்றது. அண்மையில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெறுகிறதாம்.

அந்த வகையில் மாவீரன், போர்தொழில், ஆதி புருஷ் உட்பட, திரையரங்குகளில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய திரைப்படங்கள் பலதும் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

வரவேற்பையும், சர்ச்சையையும் ஒருசேர பெற்ற, பிரபாஸ், கிரித்தி சனோன், சயிப் அலி கான் உள்ளிடோர் நடித்த பான் இந்தியா திரைப்படமான ’ஆதிபுருஷ்’ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ என இரு ப்ரபல ஒடிடி தளங்களிலும் வெளியாகி உள்ளது.

மலையாள திரைப்பட ரசிகர்களுக்காக, குஞ்சக்கோ போபன், மாளவிகா மேனன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்த ’பத்மினி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் களம் கண்டுள்ளது.

’ஆஹா’ எக்ஸ்க்ளூசிவ் வெளியீடாக ’வான் மூன்று’ திரைப்படம் வெளியாகி உள்ளது.

சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்த ’மாயோன்’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

அசோக் செல்வன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த த்ரில்லர் திரைப்படமான ’போர் தொழில்’ சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...