ஆந்திர தக்காளி வரத்தால் குறைகிறது விலை!

 ஆந்திர தக்காளி வரத்தால் குறைகிறது விலை!

சென்னை மற்றும் வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் தக்காளி விலைகள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

தக்காளி கடந்த வாரங்களில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...