ஸ்காண்டி நேவியாவில் பேரழகி த்ரிஷா… குவியும் லைக்ஸ்! | தனுஜா ஜெயராமன்

 ஸ்காண்டி நேவியாவில் பேரழகி த்ரிஷா… குவியும் லைக்ஸ்!  |  தனுஜா ஜெயராமன்

த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி லட்சக்கணக்கான லைக்ஸை அள்ளி வருகிறது. நாளுக்கு நாள் அழகாகி கொண்டே செல்லும் நடிகைகளில் முக்கியமானவர் த்ரிஷா. பொன்னியின் செல்வனில் குந்தவை பாத்திரத்தில் கலக்கிய அழகு பதுமை த்ரிஷாவிற்கு ஏராளமான பாலோயர்கள். விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் ஒரு படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’கமல் 234’ படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து எடுத்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் த்ரிஷா அழகினை குறித்து வியந்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. இப்போதும் அவர் அஜித், விஜய் என பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும் அவரது படங்கள் வரிசையாக ஹிட் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் த்ரிஷா 6 மில்லியனுக்கு மேல் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் சற்றுமுன் ஸ்காண்டிநேவிய நாட்டிலிருந்து எடுத்த அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பின்னணியில் த்ரிஷாவின் அழகை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை அதிரடியாக குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை த்ரிஷா பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் 4 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது . பேரழகி த்ரிஷாவின் அழகிய போட்டாக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...