தவிருங்கள் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை…!!!
வீட்டில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கண்ணாடி பாட்டில்களையும், எவர்சில்வர் டப்பாக்களையும் பயன்
படுத்தலாம்.
ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து மண்பாண்டங்களையும் மரக்கரண்டிகளையும் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் .
வெளியில் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை கையோடு கொண்டு போக வேண்டும். ப்ளாஸ்டிக் கவர்களுக்கு பெரிய “நோ” சொல்லுங்கள்.
அதே போன்று வீட்டிற்கு வாங்கும் சூடான உணவுகளை வாழையிலையிலோ, மந்தார இலையிலோ கட்டி தர சொல்லுங்கள். இல்லை என்றாலும் சூடான உணவுகளை வாங்க வீட்டிலிருந்து எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து செல்லுங்கள். சூடான உணவை ப்ளாட்டிக் கவரில் வாங்காதீர்கள். அது புற்று நோயை உண்டாக்கும். சூடான குழம்புகளை ஊற்றி தர டிபன்பாக்ஸ்களை கையோடு கொண்டு செல்லுங்கள் நோயை தவிருங்கள் .
எந்த விழா நிகழ்வுகளிலும் பனையோலை தட்டுகளையும், பேப்பர் கப்புகளையும் மட்டுமே பயன்படுத்தி வாருங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு உகந்தது.
ப்ளாஸ்டிக்கால் ஆன பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக வீட்டில் இரண்டு குப்பைத்தொட்டிகளை வைத்து மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து போட்டு வர வேண்டும் .
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! சுற்று சூழல் காப்போம்!