TRP இல்லாததால் நிறுத்துகிறார்களா? பாரதி கண்ணம்மா 2…!

 TRP இல்லாததால் நிறுத்துகிறார்களா? பாரதி கண்ணம்மா 2…!

TRP-யில் குறைவான புள்ளிகளை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய தொடர் அதிரடியாக விஜய் டிவி நிறுத்த உள்ளது. அந்த நேரத்தில் புதிய தொடரை களம் இறக்க உள்ளது.  இது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இரண்டாம் பாகம், சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பானது.

ஆனால் இந்த  தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்கிறது சின்னதிரை வட்டாரம்.

இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்திருந்த வினுஷா ஹீரோயினாக நடித்திருந்தார். ரோஜா தொடர் மூலம் பிரபலமான சிபு சூரியன் நடித்திருந்தார். இந்த தொடருக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வந்த போதிலும், TRP-யில் படுமோசமாக அடி வாங்கியதால் இந்த தொடரை அதிரடியாக நிறுத்திவிட்டு புதிய தொடரை ஒளிபரப்ப தயாராகியுள்ளது விஜய் டிவி.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 133 எபிசோட் வரை ஒளிபரப்பாகி முடிவடைகிறது. முதல் சீசனுக்கு கிடைத்தது போல பெரிய அளவில் பாரதி கண்ணம்மா சீசன் 2க்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தான் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்படுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...