2000 ரூபாய் நோட்டுகளை 88 % திரும்ப பெற்றது ரிசர்வ் வங்கி..!
2000 ரூபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், முக்கிய தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.. இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது.. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.,. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன.. முக்கியமாக, 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிந்தது என்று செய்திகள் வெளியாகின..
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும், ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். அதேசமயம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும்.. கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும் என்றும், நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாகவும் எஸ்பிஐ போன்ற வங்கிகள் தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமல்ல, ரூ.2000 நோட்டுகள் உயர் மதிப்புடையது என்பதால், டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவது எளிதாகும் என்றும் எஸ்பிஐ ஒருமுறை கூறியிருந்தது. எனினும், ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான டெல்லி கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இதனிடையே, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுமா? என்று சில நாட்களுக்கு முன்பு, மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தபோது, இப்போதைய சூழலில்,2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவுமே அரசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், வங்கிகளுக்கு திரும்பிய ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம், ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது.. இது குறித்து அறிக்கை ஒன்றையும் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.
அறிக்கை: அந்தஅறிக்கையில், கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி சுமார் 3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுவரை வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 88% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
கடந்த ஜூலை 31ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ள நிலையில், தற்போது ரூ.42,000 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நோட்டுகளை புழக்கத்திலிருந்து வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. மார்ச் 31ம் தேதி இந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடியாக இருந்தது. வங்கி முறைக்கு மறுபடியும் வரும் ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 87 சதவீதம் வங்கிகளில் டெபாசிட்களாக வந்ததாகவும், 13 சதவீதம் மற்ற வகை நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதத்திற்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். அல்லது பிற நோட்டுகளுடன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.